IND vs BAN - இன்று மிரட்ட காத்திருக்கும் அஸ்வின், ஜடேஜா | rohit sharma | virat kohli

x

இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் இன்று தொடங்குகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளது. கோலி, பண்ட், பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பி உள்ளனர். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை மைதானத்தில் அஸ்வின், ஜடேஜா மிரட்டக் காத்துள்ளனர். மறுபுறம் பாகிஸ்தானை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய உற்சாகத்துடன் ஷான்டோ தலமையிலான வங்கதேச அணி இந்த தொடரில் களமிறங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் சென்னை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்