உலக கோப்பை இந்திய அணி? - வெளியாகப்போகும் பட்டியல்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது.

இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ம் தேதி நடைபெற உள்ள தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அகமதாபாத்தில் மோத உள்ளன. இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை அக்டோபர் 5ம் தேதி சென்னையில் எதிர்கொள்கிறது. இந்நிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறும் வீரர்கள் யார்? என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இதற்கிடையே, இன்று பிற்பகல் 1.30 மணிக்கு இலங்கையின் கண்டியில், உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்