தங்கப் பதக்கத்தை சுட்டுப் பிடித்த இந்திய பெண்
ரியோ துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை இளவேனில் வாளறிவன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பிரேசிலின் ரியோ நகரில் நடைபெற்ற மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவு இறுதிப்போட்டியில், இளவேனில் வாளறிவன் 252 புள்ளி 2 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். இதன்மூலம், தங்கப் பதக்கத்தையும் இளவேனில் வாளறிவன் வசப்படுத்தினார். பிரான்ஸ் வீராங்கனை ஓஷான் முல்லர் வெள்ளிப் பதக்கமும், சீன வீராங்கனை ஜியால் ஷாங் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.
Next Story