இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர்.. 2ம் சுற்றில் வெற்றி பெற்ற ஒசாகா
இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் 3ம் சுற்றுக்கு ஜப்பானைச் சேர்ந்த முன்னணி வீராங்கனை நவோமி ஒசாகா முன்னேறியுள்ளார். மகளிர் ஒற்றையர்ப் பிரிவில் நடைபெற்ற 2ம் சுற்று ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை லிட்மில்லா சாம்சனோவாவை 7க்கு 5, 6க்கு 3 என்ற செட் கணக்கில் ஒசாகா வீழ்த்தினார். வருகிற 12ம் தேதி நடைபெறும் 3ம் சுற்றுப் போட்டியில் பெல்ஜியம் வீராங்கனை மெர்ட்டன்ஸ் உடன் ஒசாகா மோதவுள்ளார்.
Next Story