4வது முறையாக சாம்பியன்ஸ் கோப்பையை தட்டி தூக்கிய இந்தியா-கடைசி நொடியில் நடந்த சுவாரசிய ஆட்டம்.!

x

சென்னையில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளது.

எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும் மலேசியாவும் மோதின. ஆட்டத்தின் 9வது நிமிடத்தில் இந்திய வீரர் ஜக்ரஜ் சிங் கோல் அடிக்க, 14வது நிமிடத்தில் மலேசிய வீரர் அபு காமலும்,18வது நிமிடத்தில் ராஸி ரஹீமும், 28வது நிமிடத்தில் அமினுதின் முகமதும் கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் 3க்கு 1 என்ற கோல் கணக்கில் மலேசியா முன்னிலைப் பெற்றது. இதனையடுத்து, 2வது பாதியில் இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங், குர்ஜந்த் சிங், ஆகாஷ்தீப் சிங் கோல் அடித்து அசத்தினர். பரபரப்பாக நடைபெற்ற ஆட்ட நேர முடிவில், 4க்கு 3 என்ற கோல் கணக்கில் இந்தியா த்ரில் வெற்றி பெற்று, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.


Next Story

மேலும் செய்திகள்