இந்தியா DLS விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி..
அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டப்ளினில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த அயர்லாந்து 20 ஓவர்களில், 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. 11 மாதங்கள் கழித்து களமிறங்கிய கேப்டன் பும்ரா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்பு பேட் செய்த இந்திய அணி 6.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் விதிப்படி இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
Next Story