அஸ்வினை பின்னுக்கு தள்ளிய பும்ரா - அதிர்ச்சி அளிக்கும் புது தரவரிசை பட்டியல்

x

இந்தியா, வங்கதேசம் இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில், புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. டெஸ்ட் பவுலர்களுக்கான தரவரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்த இந்திய வீரர் பும்ரா, ஓரிடம் முன்னேற்றம் கண்டு முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்மூலம் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலர் என்ற பெருமையை பும்ரா பெற்றுள்ளார். முதலிடத்தில் இருந்த இந்திய வீரர் அஷ்வின் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், ஜடேஜா ஆறாவது இடத்தில் நீடிக்கிறார். அதேபோல டெஸ்ட் பேட்டர்களுக்கான தரவரிசையில், ஐந்தாவது இடத்தில் இருந்த இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் விராட் கோலி, 12-வது இடத்திலிருந்து ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். டெஸ்ட் ஆல்ரவுண்டர்களுக்கான தரவரிசையில் ஜடேஜா முதலிடத்திலும், அஷ்வின் இரண்டாவது இடத்திலும் நீடிக்கின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்