புனே டெஸ்ட் - நியூசிலாந்து 301 ரன்கள் முன்னிலை

x

புனேவில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 259 ரன்கள் எடுத்த நிலையில், முதல்நாள் முடிவில் இந்தியா ஒரு விக்கெட் இழப்புக்கு 16 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து இரண்டாவது நாளில் பேட்டிங் செய்த இந்தியா, நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், முதல் இன்னிங்சில் 156 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 38 ரன்களும், ஜெய்ஸ்வால் மற்றும் கில் தலா 30 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து தரப்பில் சான்ட்னர் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்