ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை அள்ளிக் குவித்த இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி நீளம் தாண்டுதலில், இந்திய வீராங்கனை ஆன்சி சோஜன் வெள்ளி வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டு போட்டியில், மகளிருக்கான நீளம் தாண்டுதலில் பங்கேற்ற ஆன்சி சோஜன், 6.63 மீட்டர் தாண்டி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார். சீனாவின் ஷிகி சியோங், 6.73 மீட்டர் தாண்டி தங்க பதக்கத்தை வென்றது குறிப்பிடத்தக்கது.
2 .ஆசிய விளையாட்டு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில், 3 தமிழர்கள் அடங்கிய இந்திய அணி, வெள்ளி பதக்கத்தை வென்று சாதித்துள்ளது.
ஆசிய விளையாட்டு 400 மீட்டர் கலப்பு தொடர் ஓட்டத்தில், முகமது அஜ்மல், வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அணி, 3.14 நிமிடங்களில் இலக்கை எட்டி, வெள்ளி பதக்கத்தை வென்றது. இதில் வித்யா ராம்ராஜ், ராஜேஷ் ரமேஷ், சுபா வெங்கடேஷ் ஆகியோர், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியில் இந்திய அணி 3 ஆம் இடத்தை பிடித்திருந்த நிலையில், 2 ஆம் இடத்தை பிடித்திருந்த இலங்கை அணி, வீரர்கள் பாதை மாறியதன் காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியா வெள்ளி வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி 3.14 நிமிடங்களில் இலக்கை எட்டியது, தேசிய சாதனையாகவும் பதிவானது.