கோலியின் முகத்திற்கு நேராக சொன்ன கம்பீர் - இணையத்தை அதிரவைத்த வீடியோ

x

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கம்பீர் மற்றும் நட்சத்திர வீரர் விராட் கோலி இடையிலான நேர்காணலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இருவருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், தங்களைப் பற்றிய மசாலா கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நேர்காணலில் கம்பீர் மற்றும் கோலி பேசி உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கோலி பெரும் பங்காற்றி இருப்பதாகவும், இளம் வீரர்களுக்கு கோலி முன்மாதிரி என்றும் கம்பீர் புகழ்ந்தார். வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது, அடுத்த கட்ட திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை இந்த நேர்காணலில் இருவரும் பேசி இருக்கும் நிலையில், இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்