மும்பை டெஸ்ட் - 2வது இன்னிங்சில் நியூசி. திணறல்

x

மும்பை டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியுள்ளது.

2ம் நாள் ஆட்டத்தில் இந்தியா முதல் இன்னிங்ஸில் 263 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90 ரன்களும் ரிஷப் பண்ட் 60 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணியில், கேப்டன் டாம் லாதம் 1 ரன்னில் ஆகாஷ் தீப் பவுலிங்கில் போல்டானார். கான்வே 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, ரச்சின் ரவீந்திரா 4 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஜடேஜா மற்றும் அஸ்வின் கடும் நெருக்கடி அளித்ததால் சீரான இடைவெளியில் நியூசிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்தது. தனியொருவராகப் போராடிய வில் யங் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து, 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்