விரைவில் இந்திய அணிக்கு திரும்புவேன் - முகமது ஷமி
இங்கிலாந்திற்கு எதிரான தொடரின் போது இந்திய அணிக்கு திரும்ப முடியுமென, வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி காயம் காரணமாக, தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை. இந்தநிலையில் அவர், தான் காயத்திலிருந்து மீண்டு வருவதாகவும், தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனது முன்னேற்றம், தேசிய கிரிக்கெட் அகாடெமியில் உள்ள மருத்துவ நிபுணர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள ஷமி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது அணிக்கு திரும்புவேன் என நம்புவதாகவும் கூறியுள்ளார்
Next Story