"தண்ணி கேன் போட வந்தேன்.. மேட்ச் விளையாட வச்சிட்டாங்க.." - கே.எல்.ராகுல்
ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், இந்திய வீரர் கே.எல்.ராகுல் சதம் விளாசி அசத்தினார். போட்டி முடிந்ததும் பேட்டியளித்த அவர், டாஸ் போடுவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்புதான், போட்டியில் தான் விளையாடப் போவதாக ராகுல் டிராவிட் தெரிவித்ததாகவும், ஸ்ரேயஸ் ஐயருக்கு திடீரென முதுகுப்பிடிப்பு ஏற்பட்டதாகவும் கூறினார். மேலும் மைதானத்திற்கு தனது பேட், ஜெர்ஸியை கொண்டு வரவில்லை என்றும், மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்தான் தூக்குவேன் என்று நினைத்தே வந்ததாகவும் கே.எல்.ராகுல் தெரிவித்தார்.
Next Story