செரீனா வில்லியம்ஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஹார்மோனி டான்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் களமிறங்க இருந்த பிரான்ஸை சேர்ந்த ஹார்மோனி டான், கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார்...
x

செரீனா வில்லியம்ஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த ஹார்மோனி டான்.. கடைசி நேரத்தில் ட்விஸ்ட்.!

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் களமிறங்க இருந்த பிரான்ஸை சேர்ந்த ஹார்மோனி டான், கடைசி நேரத்தில் போட்டியில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளார். 7 முறை விம்பிள்டன் சாம்பியனான செரீனா வில்லியம்ஸை முதல் சுற்றிலே வெளியேற்றி, உலக டென்னிஸ் வீரர்களின் கவனம் பெற்றவர், ஹார்மோனி டான். இந்நிலையில், அந்த ஆட்டத்தின் போது தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக இரட்டையர் பிரிவில் டான் களமிறங்கவில்லை. இதனால் அவருடன் முதல் முறையாக இரட்டையர் பிரிவில் விளையாட இருந்த ஜெர்மனியை சேர்ந்த கோர்பாட்ச், போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது தனக்கு வேதனை அளிப்பதாக இன்ஸ்டாகிராமில் வருத்தம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்