மும்பைக்கு விபூதி அடித்து பாண்டியாவை பழிவாங்கிய குஜராத் - 12 வருடமாக தொடரும் சோகம்

x

அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். தொடர்ந்து களமிறங்கிய குஜராத் சீராக ரன் சேர்த்து 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். பின்னர் 169 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணியில் தொடக்க வீரர் இஷான் கிஷான் டக்-அவுட் ஆனார். அதிரடியாக ஆடிய முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா 43 ரன்களில் LBW ஆனார். ப்ரூவிஸ் 46 ரன்களும் திலக் வர்மா 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் வீசிய கடைசி ஓவரில் மும்பையின் வெற்றிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது முதல் 2 பந்துகளில் சிக்ஸ் மற்றும் ஃபோர் அடித்த பாண்டியா, 3வது பந்தில் ஆட்டமிழந்தார். 20 ஓவர்கள் முடிவில் மும்பை 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கடந்த 2013ம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை தோல்வி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது


Next Story

மேலும் செய்திகள்