கால்பந்து தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்றது
கோபா அமெரிக்கா கால்பந்து தொடரில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி சாம்பியன் பட்டம் வென்று அதகளப்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜென்டினாவும் கொலம்பியாவும் பலப்பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க கடுமையாக முயற்சித்த நிலையில் முதல் பாதி கோல் இல்லாமல் முடிந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் மெஸ்ஸி காயம் அடைந்து வெளியேறினார். 2வது பாதி ஆட்டத்திலும் கோல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதால் போட்டி கூடுதல் நேரத்துக்கு சென்றது. ஆட்டத்தின் 112வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் லிசான்ட்ரோ மார்ட்டினெஸ், கோல் அடித்து அசத்த அதுவே வெற்றி கோலாகவும் மாறியது. தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் கொலம்பியா கோல் அடிக்காத நிலையில் பரபரப்பான போட்டியின் முடிவில் 1க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினா த்ரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 16வது முறையாக கோபா அமெரிக்கா கோப்பையை அர்ஜென்டினா முத்தமிட்டது.