பிரபல வீரருக்கு சிறுநீரக நோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன், நாள்பட்ட சிறுநீரக நோயால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வரும் கேமரூன் கிரீன், பேட்டி ஒன்றில் தனது நோய் பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளார். தாயின் வயிற்றில் 19- வார கருவாக இருந்த போதே சிறுநீரக நோய் குறித்து கண்டறியப்பட்டதாகவும், ஒருகட்டத்தில் தான் 12 வயதிற்கு மேல் வாழ வாய்ப்பில்லை என மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் தெரிவித்தார். தனது சிறுநீரகங்களால் இரத்தத்தை சுத்தம் செய்ய முடியாது எனக்கூறிய அவர், 5 நிலைகளை கொண்ட சிறுநீரக பாதிப்பில் தான் இரண்டாம் கட்ட பாதிப்பில் உள்ளதாக தெரிவித்தார்.
Next Story