விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்-அரையிறுதிக்கு ஜோகோவிச் முன்னேற்றம்

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப்போட்டிக்கு செர்பியாவைச் சேர்ந்த முன்னணி வீரர் நோவாக் ஜோகோவிச் முன்னேறியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் டிமினாருடன் ஜோகோவிச் ஆடவிருந்தார். ஆனால் காயம் காரணமாக போட்டியில் இருந்து டிமினார் விலகினார். இதனால் வால்க்-ஓவர் அடிப்படையில் அரையிறுதிச் சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறினார். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இத்தாலி வீரர் முசெட்டியுடன் ஜோகோவிச் மோதவுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்