ஹார்ட் பீட்டை எகிற வைத்த மேட்ச்.. சூப்பர் ஓவருக்கு சென்ற போட்டி - கடைசியில் நடந்த ட்விஸ்ட்

x

குரூப் பி பிரிவில் பார்படாஸில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நமீபியா பவுலிங் தேர்வு செய்தது. தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த ஓமன் 109 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. நமீபியா வேகப்பந்துவீச்சாளர்கள் டிரம்ப்பிள்மன் 4 விக்கெட்டுகளையும் டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து 110 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய நமீபியா 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்தது. போட்டி சமன் ஆனதால் சூப்பர் ஓவர் பின்பற்றப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நமீபியா பவுண்டரிகளை விளாசி 21 ரன்கள் எடுத்தது. 22 ரன்கள் இலக்கை நோக்கி சூப்பர் ஓவரில் ஆடிய ஓமன் ஒரு விக்கெட் இழப்புக்கு10 ரன்கள் மட்டுமே எடுக்க, சூப்பர் ஓவரில் நமீபியா வெற்றி பெற்றது.


Next Story

மேலும் செய்திகள்