டெஸ்ட்டில் 3வது முறையாக 800 ரன்கள் குவிப்பு - இங்கிலாந்து சாதனை

x

டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது முறையாக 800 ரன்கள் குவித்து இங்கிலாந்து கிரிக்கெட் அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. முல்தானில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 823 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் நான்காவது சிறந்த ஸ்கோரை பதிவுசெய்து இங்கிலாந்து சாதனை படைத்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் 3 முறை 800 ரன்களுக்கு மேல் குவித்த முதல் அணி என்ற வரலாற்றையும் இங்கிலாந்து படைத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்