ரஞ்சி கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - அரையிறுதிக்கு தமிழ்நாடு முன்னேற்றம்
கோவையில் உள்ள தனியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணியும், உனத்கட் தலைமையிலான நடப்பு சாம்பியன் சவுராஸ்டிரா அணியும் மோதின. போட்டியின் முதல் இன்னிங்ஸில் சவுராஸ்டிரா 183 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 338 ரன்கள் குவித்தது. 155 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய சவுராஸ்டிரா, 2வது இன்னிங்ஸில் 122 ரன்களுக்கு சுருண்டது. இதன்மூலம் இன்னிங்ஸ் மற்றும் 33 ரன்கள் வித்தியாசத்தில் தமிழ்நாடு அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழ்நாடு கேப்டன் சாய்கிஷோர் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்
Next Story