சொந்த மண்ணில் இந்தியா குறைந்தபட்ச ரன்கள்..

x

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியா 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில் சொந்த மண்ணில் இந்தியா எடுத்த குறைவான ஸ்கோர் இதுவாகும். கடந்த 1987ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 75 ரன்களுக்கு ஆட்டமிழந்ததே சொந்த மண்ணில் இந்தியாவின் குறைவான ஸ்கோர் ஆக இருந்த நிலையில், தற்போது 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இந்தியா அவச்சாதனை படைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக இந்தியாவின் மூன்றாவது குறைந்தபட்ச ஸ்கோர் இது என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்