நிறைவுபெற்றது கேலோ இந்தியா போட்டிகள்.. எந்த இடத்தில் தமிழகம்?.. உற்சாகமாக பேசிய வீரர், வீராங்கனைகள்

x

கேலோ இந்தியா 2023 விளையாட்டு போட்டியானது, கடந்த 19ம் தேதி தொடங்கி சென்னை, கோவை, மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இந்த போட்டிகளில் 56 தங்கம், 48 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்த 156 பதக்கங்களோடு மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடத்தையும், 38 தங்கம், 20 வெள்ளி, 39 வெண்கலம் என 97 பதக்கங்களை வென்று தமிழ்நாடு 2வது இடத்தையும், 103 பதக்கங்களோடு அரியானா 3வது இடத்தையும் பிடித்தன. இந்நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற நிறைவு விழாவில், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாநிலங்களுக்கு கோப்பைகளை வழங்கி கவுரவித்தனர். முன்னதாக, பல்வேறு மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகளும், தமிழின் சிறப்பை விளக்கும் வகையில் ஒளிபரப்பப்பட்ட அனிமேஷன் காட்சிகளும் பார்வையார்களை வெகுவாக கவர்ந்தது...


Next Story

மேலும் செய்திகள்