``ஜெயிக்கவே முடியாதா உன்ன'' - RR-ஐ லெப்ட் ஹேண்டில் டீல் செய்த GT
#rrvsgt #rashidkhan #sanjusamson
ஐபிஎல் தொடரில் பரபரப்பாக நடைபெற்ற 24வது லீக் போட்டியில் ராஜஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் த்ரில் வெற்றி பெற்றது
ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில் பவுலிங் தேர்வு செய்தார்.
தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 24 ரன்களும் பட்லர் 8 ரன்களும் எடுத்து கேட்ச் ஆகினர்.
3வது விக்கெட்டுக்கு கேப்டன் சஞ்சு சாம்சன் - ரியான் பராக் ஜோடி சிறப்பாக விளையாடி 130 ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்தனர்.
பராக் 76 ரன்களும் சாம்சன் 68 ரன்களும் எடுக்க, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு ராஜஸ்தான் 196 ரன்கள் குவித்தது.
தொடர்ந்து 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய குஜராத் அணியில் தொடக்க வீரர் சாய் சுதர்சன் 35 ரன்கள் எடுத்தார். வேட் (Wade), அபினவ் மனோகர், விஜய் சங்கர் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
அரைசதம் அடித்த கேப்டன் கில் 72 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆவேஷ் கான் வீசிய கடைசி ஓவரில் குஜராத் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டதால் ஆட்டம் பரபரப்பான நிலையில், கடைசி பந்தில் ஃபோர் அடித்து ரஷீத் கான் குஜராத்தை வெற்றி பெற வைத்தார்.
3 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற குஜராத், தொடர்ந்து 4 போட்டிகளில் வென்ற ராஜஸ்தானின் வெற்றிநடைக்கு முட்டுக்கட்டை போட்டது.