அடுத்தடுத்து வெண்கலம்..அசத்தும் இந்தியா..

x

சீனாவில் நடைபெறும் ஆசிய போட்டிகளின் ரோலர் ஸ்கேட்டிங்கில் இந்திய ஆடவர் மற்றும் மகளிர் அணி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தி உள்ளது. ஆடவர் 3000 மீட்டர் ரோலர் ஸ்கேட்டிங்கில் தமிழக வீரர் ஆனந்த் குமார், விக்ரம் இங்கேல், ஆர்யன் பால், சித்தாந் காம்ப்ளே ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலம் வென்றது. இதேபோல் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனைகள் ஆரதி, கார்த்திகா, ஹீரல் சாது, சஞ்சனா பதுலா ஆகியோர் அடங்கிய இந்திய அணி, வெண்கலம் வென்று சாதனை படைத்தது.


Next Story

மேலும் செய்திகள்