பெங்களூரு டெஸ்ட் - 46 ரன்களுக்கு சுருண்டது இந்தியா
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில், 2ம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். போட்டியில் அவ்வப்போது மழை குறுக்கிட்ட நிலையில் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். ரோகித் 2 ரன்கள் எடுத்தார். கோலி, சர்ஃப்ராஸ் கான், ராகுல், ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தனர். சற்று நேரம் தாக்குப்பிடித்த ரிஷப் பண்ட், 20 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா, 32வது ஓவரில் வெறும் 46 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்ரி 5 விக்கெட்டுகளையும், வில்லியம் ஓரோர்க் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். தொடர்ந்து முதல் இன்னிங்சில் நியூசிலாந்து விளையாடி வருகிறது.
பெங்களூரு டெஸ்ட் - 46 ரன்களுக்கு சுருண்டது இந்தியா