ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் - இறுதிப்போட்டியில் இந்திய வீரர்
ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் தொடரின், இறுதிப் போட்டிக்கு இந்திய வீரர் பிரணாய் முன்னேறி உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் சக இந்திய வீரர் பிரியான்ஷ் ரஜாவத்துடன் பிரணாய் மோதினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் முதல் செட்டை 21க்கு 18 என்ற புள்ளிகள் கணக்கில் பிரணாய் வென்றார். தொடர்ந்து 2வது செட்டிலும் ஆதிக்கம் செலுத்திய பிரணாய், 21க்கு 12 என்ற கணக்கில் 2வது செட்டை கைப்பற்றி அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றார். நாளை காலை 9.30 மணியளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் சீன வீரர் வெங் (weng) உடன் சாம்பியன் பட்டத்துக்காக பிரணாய் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
Next Story