ஆசிய விளையாட்டு போட்டி - இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி - இரு இளம் வீராங்கனைகள் அசத்தல்
ஆசிய விளையாட்டு போட்டியின் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியாவிற்கு மேலும் இரு பதக்கங்களை பெற்றுத் தந்திருக்கின்றனர் இரு இளம் வீராங்கனைகள் . 17 வயதேயான இளம் இந்திய வீராங்கனை பலாக், 10 மீட்டர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார். தொடர்ந்து அதே பிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனையான 18 வயதான ஈஷா சிங், வெள்ளிப் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்திருக்கிறார்.
Next Story