ஆசிய கோப்பை | இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் - டிரெஸ்ஸிங் ரூமில் பயங்கர சண்டை

x

ஆசிய கோப்பை | இறுதி போட்டி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான் - டிரெஸ்ஸிங் ரூமில் பயங்கர சண்டை

ஆசிய கோப்பை தொடரிலிருந்து வெளியேறிய பின்னர், பாகிஸ்தான் அணி வீரர்களிடையே வாக்குவாதம் நடைபெற்றதாக, தகவல் வெளியாகியுள்ளது.

ஆசிய கோப்பை தொடரின் பரபரப்பான சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில், இலங்கையிடம் வீழ்ந்த பாகிஸ்தான், இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பினை இழந்தது. இந்தநிலையில், போட்டிக்கு பின்னர் வீரர்களின் உடைமாற்றும் அறையில், பாகிஸ்தான் வீரர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அணியின் கேப்டன் பாபர் அசாம், வீரர்கள் பொறுப்பில்லாமல் விளையாடியதாக குற்றஞ்சாட்டியதாக கூறப்படுகிறது. அதிருப்தியடைந்த ஷாகின் அப்ரிடி, குறைந்தபட்சம் நன்றாக விளையாடிவர்களை பாராட்டுங்கள் என கூறியதாகவும், அதனை கேட்டு மேலும் ஆத்திரமடைந்த பாபர் அசாம், யார் நன்றாக விளையாடுகிறார்கள் - விளையாடவில்லை என தனக்கு தெரியும் என்றதாகவும் கூறப்படுகிறது. பின்னர், முகமது ரிஸ்வான் இருவரையும் சமாதனம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த தகவலால், பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்