டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியவில்லை என, அஷ்வினின் மனைவி ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அஷ்வின் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய மகிழ்ச்சியை கூட கொண்டாட முடியவில்லை என, அஷ்வினின் மனைவி ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின்போது மருத்துவ அவசர நிலை காரணமாக அஷ்வின் பாதியிலேயே வெளியேறியது குறித்து, அவரது மனைவி பிரீத்தி தகவல் வெளியிட்டுள்ளார். அஷ்வின் 500-வது விக்கெட் எடுத்த சிறிது நேரத்தில் அவரது தாயார் மயக்கமடைந்ததாகவும், அஷ்வின் உடனடியாக சென்னை திரும்ப புஜாராவின் குடும்பத்தினர் உதவி செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அஷ்வின் தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன் அஷ்வினை போட்டிக்கு திரும்பி செல்ல அறிவுறுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அந்த கடினமான நேரத்தில் ரோகித் ஷர்மா, ராகுல் டிராவிட், பிசிசிஐ என அனைவரும் உறுதுணையாக இருந்ததாகவும் ப்ரீத்தி தெரிவித்துள்ளார்.
Next Story