ஒலிம்பிக் சாதனை - தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீம்

x

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் ஒலிம்பிக் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இறுதிப் போட்டியில் 92 புள்ளி 97 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து அர்ஷத் நதீம் அனைவரையும் வியக்க வைத்தார். இதன்மூலம் முந்தைய ஒலிம்பிக் சாதனையையும் முறியடித்த அவர், முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை தனதாக்கினார். மேலும், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற முதல் பாகிஸ்தான் தடகள வீரர் என்ற பெருமையையும் அர்ஷத் நதீம் பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்