10.5 ஓவரில் முடிந்த ஆட்டம்.. அமெரிக்காவை அலறவிட்ட வெஸ்ட் இண்டீஸ்
டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்று போட்டியில் அமெரிக்காவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீழ்த்தியது. பார்படாஸில் நடைபெற்ற போட்டியில், குரூப் 2 பிரிவில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதின. முதலில் பேட் செய்த அமெரிக்கா 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த நிலையில், 10.5-வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது. வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் அதிரடியாக விளையாடி 39 பந்துகளில் 82 ரன்களை குவித்தார். இதன்மூலம் 2 புள்ளிகளை பெற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, குரூப் 2 பிரிவில் இரண்டாம் இடத்திற்கு முன்னேறி அரையிறுதி வாய்ப்பை தக்கவைத்து கொண்டது.
Next Story