சூப்பர் ஓவரில் பாகிஸ்தானுக்கு சம்பவம் - அலறவிட்டு வரலாறு படைத்த அமெரிக்கா

x

டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வீழ்த்தி அமெரிக்க அணி வரலாறு படைத்துள்ளது.அமெரிக்காவின் டல்லாஸில் நடைபெற்ற போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தான், அமெரிக்க அணிகள் மோதின. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம் 44 ரன்களும், ஷதாப் கான் 40 ரன்களும் எடுத்தனர். தொடர்ந்து பேட் செய்த அமெரிக்க அணியும் 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் சமனில் முடிந்தது.இதையடுத்து நடைபெற்ற சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த அமெரிக்கா 18 ரன்கள் சேர்த்தது.பாகிஸ்தான் பந்துவீச்சாளர் முகமது ஆமிர் 3 வைடு பந்துகளை வீசியதும், பாகிஸ்தான் அணியின் ஃபீல்டிங்கில் மோசமாக இருந்ததும் அந்த அணிக்கு பாதகமாக அமைந்தது.தொடர்ந்து 19 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் சூப்பர் ஓவரில் 13 ரன்கள் மட்டுமே எடுத்தது.இதன்மூலம் சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்ற அமெரிக்கா, பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி அளித்தது. மேலும் குரூப் A பிரிவில் 4 புள்ளிகளுடன் அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்