புயலில் சிக்கிய இந்திய அணி- காப்பாற்ற சென்ற ஏர் இந்தியா விமானம் -வெளியான பரபரப்பு தகவல்

x

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கைப்பற்றிய நிலையில், பார்படாஸில் வீசிய புயல் காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் இந்திய கிரிக்கெட் அணியினர் இந்தியா திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் புயலின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், இந்திய அணியை அழைத்து வருவதற்காக ஏர் இந்தியா விமானம் பார்படாஸ் சென்றடைந்தது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள், அவர்களது குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட எழுபதுக்கும் மேற்பட்டோர், பார்படாஸில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டனர். நாளை அதிகாலை விமானம் டெல்லி வந்தடையும் எதிர்பார்க்கப்படுகிறது. 17 ஆண்டுகளுக்கு பின் டி20 உலகக்கோப்பையை இந்தியாவிற்கு கொண்டு வருவதாக, விமானத்தில் பயணிக்கும் இந்திய வீரர்கள் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்