நுழைந்த ஆப்கானிஸ்தான்.. வெளியேறியது நியூசிலாந்து! | afghanistan | new zealand | t20worldcup

x

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் பப்புவா நியூ கினியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சூப்பர்-8 சுற்றுக்கு ஆப்கானிஸ்தான் முன்னேறியுள்ளது.

குரூப் சி பிரிவில் டிரினிடாடில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பப்புவா நியூ கினி, ஆப்கானிஸ்தானின் பவுலிங்கை தாக்குப்பிடிக்க முடியாமல் 95 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. ஆப்கன் வேகப்பந்துவீச்சாளர் ஃபரூக்கி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 96 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி ஆடிய ஆப்கானிஸ்தான், 16வது ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கன் வீரர் நைப் 49 ரன்கள் அடித்து வெற்றிக்கு வித்திட்டார். தொடர்ச்சியாக 3 வெற்றிகளைப் பெற்ற ஆப்கானிஸ்தான் சூப்பர்-8 சுற்றுக்கும் முன்னேறி உள்ளது. அதே சமயம் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றதால் தொடரில் இருந்து அதிகாரப்பூர்வமாக நியூசிலாந்து வெளியேறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்