தோனி வீசிய "யுக்தி" வலை! - வசமாக சிக்கிய பொல்லார்ட்!
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், களத்தில் தோனி கையாண்ட யுக்தி வலையில் பொல்லார்ட் சிக்கிய சம்பவத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில், களத்தில் தோனி கையாண்ட யுக்தி வலையில் பொல்லார்ட் சிக்கிய சம்பவத்தை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர். நேற்று சென்னை-மும்பை அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில், பேட்டிங் செய்த மும்பை அணி வீரர் பொல்லார்ட் துவக்கத்தில் சிஎஸ்கேவை மிரட்டிய நிலையில், சற்றும் அசராத தோனி 17வது ஓவரில் களத்தில் சில மாற்றங்களைச் செய்து பவுண்டரி லைனுக்கு அருகில், சற்று நேராக ஃபீல்டரை நிற்க வைத்தார். தோனி வீசிய வலையை அறியாத பொல்லார்ட், மஹீஷ் தீக்ஷணா வீசிய பந்தை சிக்சருக்கு தூக்கி அடித்து ஷிவம் துபேவிடம் கேட்ச் அவுட் ஆனார்.
Next Story