பஞ்சாப்பை வாரி சுருட்டிய டெல்லி... ஷா-வார்னர் அதிரடியால் அதிரிபுதிரி வெற்றி
ஐபிஎல் தொடரின் 32 ஆவது லீக் போட்டியில், டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 32 ஆவது லீக் போட்டியில், டெல்லி அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 115 ரன்களை மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், கலீல் அகமத் , லலித் யாதவ் தலா 2 விக்கெட்கள் கைப்பற்றினர். பின்னர், 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி, பிருத்வி ஷா மற்றும் வார்னரின் அதிரடியால், 10 புள்ளி 3 ஓவர்களில் 119 ரன்கள் அடித்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Next Story