கம்மின்ஸ் அதிரடி - 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.
x
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியில் சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் விளாசினார். மேலும், திலக் வர்மா 38 ரன்களும், பிரேவிஸ் 29 ரன்களும் எடுத்தனர். பின்னர் 162 ரன்கள் எடுத்தால் ,வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 162 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணியின் பேட் கம்மின்ஸ் 15 பந்துகளில் 56 ரன்கள் எடுத்த நிலையில், வெங்கடேஷ் ஐயர்  50 ரன்களுடன் கடைசி வரை நிலைத்து நின்று ஆடினார். இதன் காரணமாக கொல்கத்தா அணி 4 போட்டிகளில் 3இல் வெற்றி பெற்றுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்