பட்டையைக் கிளப்பிய பட்லர்... மும்பைக்கு மரண அடி கொடுத்த ராஜஸ்தான்
நடப்பு ஐ.பி.எல் சீசனில் இரண்டாவது வெற்றியை ராஜஸ்தான் அணி பதிவு செய்துள்ளது.
நேற்று நடைபெற்ற போட்டியில், முதலில் களமிறங்கிய ராஜஸ்தான், 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்களை எடுத்தது. ஜோஸ் பட்லர் சதம் அடித்து அசத்தினார். பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் களமிறங்கிய மும்பை அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்களை மட்டுமே எடுத்தனர். இதன்மூலம் 23 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வெற்றி பெற்றது. சதம் அடித்த ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.
Next Story