இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டன் சுட்டுக்கொலை

பஞ்சாப்பில் சர்வதேச கபடி வீரரை 4 பேர் கொண்ட கும்பல் அனைவர் முன்னிலையிலும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம், அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
ஜலந்தரில் உள்ள மாலியன் கிராமத்தில் இந்திய கபடி அணியின் முன்னாள் கேப்டனான சந்தீப் சிங் நங்கல் தலைமையில் கபடிப்போட்டி நடைபெற்றது. மைதானத்தில் வீரர்கள் விளையாடி கொண்டிருந்த போது கூட்டத்திற்குள் புகுந்த 4 பேர் சந்தீப் சிங் நங்கலை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். 20 ரண்டுகள் சுடப்பட்டதில் சந்தீப்பின் தலை மற்றும் மார்பை 10 குண்டுகள் துளைத்தன. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்தார். தொழில்முறை கபடி போட்டிகளிலும், ஸ்டாப்பர் நிலையிலும் விளையாடி வந்த சந்தீப் ரசிகர்களால் கிளாடியேட்டர் என அழைக்கப்பட்டார். கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கபடி விளையாடி நாட்டிற்கு பெருமை சேர்ந்த சந்தீப், குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்