20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...?

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...? இந்தியா அரையிறுதி செல்ல வாய்ப்பு உள்ளதா...? என்பது குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் சொல்வது என்ன..? என்பது குறித்த ஒரு தொகுப்பை பார்க்கலாம்...
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி : இந்தியாவின் தோல்விக்கு காரணம் என்ன...?
x
அரபு நாடுகளில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தான், நியூசிலாந்திடம் தோற்றதன் மூலம் அரைஇறுதி வாய்ப்பு வெகுவாக மங்கிவிட்டது. 

இந்திய அணியின் ஆட்டம் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், அங்கு போட்டியின் முடிவை தீர்மானிப்பதில் 'டாஸ்' தான் முக்கிய பங்கு வகிக்கிறது என்பது தெளிவாகியிருக்கிறது. 

இந்தியாவுடன் விளையாடிய பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் டாஸ் வென்றதும், இரவில் பனிப்பொழிவின் தாக்கத்தை மனதில் கொண்டு முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தன. இதனாலே பாதி நம்பிக்கையை இழக்கும் சூழல் ஏற்பட்டுவிடுகிறது. 2-வது பேட்டிங் செய்வது சுலபமாகி விடுகிறது.

சூப்பர்-12 சுற்றில் முதல் 16 ஆட்டங்களில் 13 ஆட்டங்களில் 2-வது பேட் செய்த அணிகளே வெற்றியை ருசித்துள்ளன. மீதமுள்ள 3 ஆட்டங்களில் முதலில் பேட் செய்த அணிகள் வெற்றி கண்டன. ஆனால் அதில் இரு ஆட்டங்கள் பகலில் நடந்தவையாகும். 

இதுபோக இந்திய அணியின் தேர்வு சோபிக்கவில்லை என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்