டி20 கேப்டன் பொறுப்பில் விலகிய கோலி - வருகிற உலகக்கோப்பைதான் முதலும்...கடைசியும்...
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு குறித்து ரசிகர்கள் கூறுவது என்ன? விரிவாக பார்ப்போம்
இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 உலகக்கோப்பைகளை வென்று தந்த எம்.எஸ். தோனி, திடீர் அறிவிப்பாக கேப்டன்சியை ராஜினாமா செய்து ஷாக் கொடுத்தார். தற்போது இதனை நினைவு கூற வைத்துள்ளார் கேப்டன் விராட் கோலி...கடந்த 6 ஆண்டுகளாக மூன்று வடிவிலான போட்டியிலும் தொடர்ந்து கேப்டனாக இருந்து வருவதால், பணிச்சுமையை கருதி வருகிற உலகக்கோப்பைக்கு பிறகு டி20 அணிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன் என்பது தான் அந்த அறிவிப்பு.கேப்டன்சி கேரியரில் உச்சத்தில் இருக்கும் கோலி, திடீரென டி20 கேப்டன்சியை விட்டுக்கொடுத்துள்ளது ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.டி20 பொறுத்தவரை இதுவரை 45 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி, அதில் 29 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியையும் கண்டுள்ளார். கேப்டனாக அவர் சந்திக்கும் முதல் மற்றும் கடைசி டி20 உலகக்கோபை வருகிற தொடர் தான்.
கேப்டனாக உலகக்கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, டெஸ்ட் சாம்பியன்ஷிப் என 3 ஐசிசி தொடர்களை சந்தித்த கோலி, இரண்டு பைனல், ஒரு அரையிறுதி வரை அழைத்து சென்றும் கோப்பை வெல்லாதது ஏமாற்றமாக இருந்தது.
மறுபக்கம் ரன் மெஷின் என கொண்டாடப்பட்டு வரும் காலக்கட்டத்தில், 2 ஆண்டுகளாக பேட்டிங்கில் ஏற்பட்டுள்ள சில பின்னடைவு,ஐபிஎல் தொடரில் கேப்டனாக ரோகித்தின் ஆளுமை என எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு கோலி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என பேசப்படுகிறது..எது எப்படி இருந்தாலும், கேப்டன்ஷியை துறந்த பிறகு சச்சின் தெண்டுல்கர் எப்படி முழுக்க முழுக்க பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினாரோ, அதேபோல கோலியும், அனைத்துவிதமான போட்டிகளிலும் வழக்கமான பாணிக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்கள் எதிர்பார்ப்பு...

Next Story