இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட் கிரிக்கெட்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து நிதானம்
இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 120 ரன்களை எடுத்து உள்ளது.
லீட்ஸில் நடந்து வரும் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, முதல் இன்னிங்சில் 78 ரன்களுக்கு சுருண்டது. இதனையடுத்து, தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர்கள் பர்ன்சும், ஹசீப்பும் அரைசதம் அடித்த நிலையில், முதல் நாள் ஆட்ட முடிவில், இங்கிலாந்து விக்கெட் இழப்பின்றி 120 ரன்கள் எடுத்து உள்ளது.
Next Story