டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் - வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா...

ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார், இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் - வரலாறு படைத்தார் நீரஜ் சோப்ரா...
x
ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கத்தை வென்று கொடுத்து சாதனை படைத்துள்ளார், இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா.... வரலாறு படைத்துள்ள நீரஜ் சோப்ராவின் சாதனை பயணத்தை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.தனக்கே உரித்தான பாணியில்... வீறு கொண்டு ஒவ்வொரு முறையும் நீரஜ் சோப்ராவின் கையில் இருந்து ஈட்டி எறியப்படும் பொழுதெல்லாம்.... புதிய வரலாறு எழுதப்பட இருப்பதை எண்ணி ஒட்டுமொத்த இந்தியாவும் பூரிப்பு அடைந்த தருணம் அது.ஒலிம்பிக் தடகள போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் பிரிவில் களமிறங்கிய நீரஜ் சோப்ரா, தகுதி சுற்றிலேயே முதலிடம் பிடித்ததால் அவர் மீதான இந்தியாவின் ஒட்டுமொத்த எதிர்ப்பார்ப்பும் கடைசி நிமிடம் வரை நீடித்தது.ஆனால் முதல் முயற்சிலேயே சக போட்டியாளர்கள் யாரும் எட்டாத, 87 புள்ளி 03 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து தங்கத்தை ஏறத்தாழ உறுதி செய்தார், நீரஜ்... அடுத்து 87 புள்ளி 58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து அனைவரையும் ஆச்சரியப்பட்ட வைத்தார்.. இறுதி வரை மற்ற நாட்டு வீரர்கள் நீரஜ் சோப்ரா வீசிய தூரத்தை நெருங்காத நிலையில், ஒலிம்பிக் தடகள போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் வென்று கொடுத்த முதல் வீரர் என்ற வரலாறு 23 வயதான இளம் வீரர் நீரஜ் சோப்ராவின் வசம் சென்றது..இதன் மூலம் இந்தியாவின் 125 ஆண்டு கால காத்திருப்பு முடிவுக்கு வந்தது மட்டுமின்றி... இந்திய ராணுவ வீரர் ஒருவரால் எழுதப்பட்டுள்ள இந்த புதிய வரலாறு... ஒட்டுமொத்த தேசத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்