ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்,
டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இது தொடர்பாக குடியரசுத் தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்று ஒவ்வொரு இந்தியரையும் நீரஜ் சோப்ரா பெருமைப்பட வைத்துள்ளதாக கூறி உள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வரலாறு படைத்துள்ள நீரஜ் சோப்ரா, இளைஞர்களுக்கு உத்வேகமாக திகழ்வார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதேபோல், பிரதமர் மோடி தன்னுடைய வாழ்த்து செய்தியில், டோக்கியோவில் நீரஜ் சோப்ரா வரலாறு படைத்து இருப்பதாகவும், நீரஜ் சோப்ராவின் சாதனை என்றென்றும் நினைவில் நிற்கும் என்றும் கூறி உள்ளார்.ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஹரியானாவை சேர்ந்த நீரஜ் சோப்ராவுக்கு அம்மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசு தொகை அறிவித்துள்ளது. அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் ரொக்க பரிசும், முதல் கிரேடு அரசு பணியும் வழங்கப்படும் என தெரிவித்து உள்ளார். அதேபோல், ஹரியானாவின் பஞ்ச்குலாவில் அமைய உள்ள தடகள பயிற்சி மையத்தின் தலைவராக நீரஜ் சோப்ரா பதவியேற்று கொள்ளலாம் என்றும், 50 சதவீத சலுகையில் அவருக்கு குடியிருப்பு வழங்கப்படும் என்றும் ஹரியானா அரசு அறிவித்து உள்ளது.
Next Story