டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் போட்டி : காலிறுதியில் பஜ்ரங் புனியா வெற்றி
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய வீரர் பஜ்ரங் புனியா முன்னேறி உள்ளார்.
ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவின் நாக்-அவுட் சுற்றில், கிர்ஜிஸ்தான் வீரரை வீழ்த்திய பஜ்ரங் புனியா, காலிறுதியில் ஈரான் வீரர் கியாசி உடன் மோதினார். இதில் ஈரான் வீரரை கீழே சாய்த்த பஜ்ரங் புனியா, 2-க்கு 1 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றார். இதன்மூலம், 65 கிலோ மல்யுத்தப் போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கும் அவர் தகுதி பெற்றார்.
இன்று மதியம் நடைபெறும் அரையிறுதி போட்டியில் அசர்பைஜான் வீரர் ஹாஜி அலியெவ்வுடன் பஜ்ரங் புனியா மோத உள்ளார்.
Next Story