இந்திய ஹாக்கி சூப்பர்ஸ்டார் ஸ்ரீஜேஷ் - வெண்கலம் வெல்ல முக்கிய காரணம்
ஒலிம்பிக்கில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்த கோல் கீப்பர் ஸ்ரீஜேஷை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவரது சாதனை பயணம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு
இந்த முறையாவது ஹாக்கியில் பதக்கம் கிடைக்குமா என ஏங்கிக்கொண்டிருந்தது இந்திய தேசம்..
ஆட்டம் கடைசி 6 விநாடிக்கு வந்தது. இந்தியாவிற்கு வெண்கலம் வேண்டும் என்றால் ஜெர்மனியின் பெனால்டி வாய்ப்பை தடுக்க வேண்டும்..
அனைவரது பார்வையும் கோல் கீப்பர் மீது. ஜெர்மனி வீரர் ஆக்ரோஷமாக கோல் போஸ்டை நோக்கி பந்தை அடிக்க, அசால்ட்டாக தடுத்து வெற்றியை உறுதி செய்தார் கோல் கீப்பர்.. 41 ஆண்டுகால பதக்க கனவு ஈடேறியது...
இந்தியாவின் கதாநாயகன் ஆனார் ஸ்ரீஜேஷ்
2006ஆம் ஆண்டு இந்திய அணிக்கு தேர்வான ஸ்ரீஜேஷ்க்கு, திருப்புமுனை என்றால் 2011ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஸ் டிராபிதான். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெனால்டி சூட் அவுட்டை தடுத்து வெற்றி பெற வைத்தார்..
அன்று தொடங்கி இன்று வரை இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்ரீஜேஷ்தான்..
ஒலிம்பிக் பதக்கத்தை லட்சியமாக வைத்து நகர்ந்துக்கொண்டிருந்த ஸ்ரீஜேஷ்க்கு, புதன்கிழமை மறக்க முடியாத நாளானது
இந்திய அணி வெண்கலம் வென்ற பிறகு, கோல் கீப்பராக இருந்த ஸ்ரீஜேஷை பார்த்து ஆனந்த கண்ணீர் விட்டவர்கள் இங்கு ஏராளம்.. அதுதான் அவரது சாதனைக்கான அங்கீகாரம்...
Next Story