டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தம் - இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம்
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார்.
டோக்கியோ ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்தப் போட்டியில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் நடந்த இறுதிப் போட்டியில் ரஷ்ய வீரர் ஸாவுர் உக்வேவுடன் ரவிக்குமார் தாஹியா மோதினார். இதில் 7-க்கு 4 என்ற புள்ளிகள் கணக்கில் ரஷ்ய வீரர் வெற்றி பெற்று, தங்கப் பதக்கத்தை தட்டி சென்றார். இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியாவுக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவுக்கு 2வது வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
Next Story