டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - காலிறுதியில் இந்திய மகளிர் அணி வெற்றி

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய மகளிர் அணி சாதனை படைத்து உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி - காலிறுதியில் இந்திய மகளிர் அணி வெற்றி
x
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்திய மகளிர் அணி சாதனை படைத்து உள்ளது. லீக் சுற்றில் 4-வது இடத்தைப் பிடித்து காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய மகளிர் அணி, இன்று நடைபெற்ற காலிறுதியில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொண்டது. ஆட்டத்தின் 22-வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் அற்புதமான கோல் அடித்து முதல் பாதியில் இந்தியாவை முன்னிலைப் படுத்தினார். தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோல் அடிக்க போராடினர். இருப்பினும், சிறப்பான தடுப்பாட்டத்தை மேற்கொண்ட, இந்திய வீராங்கனைகள், ஆஸ்திரேலிய வீராங்கனைகளின் கோல் அடிக்கும் முயற்சியை முறியடித்தனர். பெனால்டி வாய்ப்புகளையும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள் கோட்டைவிட்ட நிலையில், ஆட்ட நேர முடிவில் 1-க்கு பூஜ்யம் என்ற கோல் கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது. குர்ஜித் கவுர் அடித்த ஒரு கோல், இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது. இந்த வெற்றியால், ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி போட்டியின் அரையிறுதி ஆட்டத்துக்கு, முதல் முறையாக முன்னேறி இந்தியா வரலாறு படைத்து உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்