2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் - முடிவை மாற்றிய கினியா அணி
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்த கினியா அணி, தற்போது போட்டிகளில் பங்கேற்கப் போவதாக, தனது முடிவை மாற்றி உள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருந்த கினியா அணி, தற்போது போட்டிகளில் பங்கேற்கப் போவதாக, தனது முடிவை மாற்றி உள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கொரோனா பரவலை காரணம் காட்டி, ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்தது. இந்நிலையில், உரிய பாதுகாப்பு அளிக்கப்படுவதாக டோக்கியோ ஒலிம்பிக் அதிகாரிகள் உறுதி அளித்ததால், ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதாக கினியா விளையாட்டுத்துறை அமைச்சர் அறிவித்து உள்ளார். முன்னதாக நிதிப் பற்றாக்குறை காரணமாக கினியா, ஒலிம்பிக்கில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
Next Story